மாஸ்டர் திரைப்படத்தின் மாஸான பிசினஸ்! பெருமிதத்தோடு கூறிய பிரபல நிறுவனம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜாய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்தின் மாஸான பிசினஸ்.

மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நாங்கள் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்து விட்டோம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜாய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலீக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் குறித்து இந்த நிறுவனம்  கூறுகையில், ‘மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நாங்கள் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்து விட்டோம். படத்தின் டீசர், ட்ரெய்லர் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியாக வில்லை. ஆனால் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது’ என கூறியுளள்ளார்.

இதனை அவர்கள் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

unknown node