நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeMalavika Mohanan Tangalaan [Image Source: Twitter ]
இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
unknown nodeMalavikaMohanan [Image Source: Twitter ]
மேலும், முன்னதாக இந்த தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் எதிர்பார்த்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுக்கவில்லை என்பதால் பா. ரஞ்சித் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் மாளவிகா மோகனனுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
unknown nodeஇதனையடுத்து, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மாளவிகா மோகனன் சிலம்ப செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.