"விஸ்வாசம் "திரைப்படத்தின் 75-வது நாளை வெறித்தனமாக கொண்டாடிய மதுரை தல ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

This news gives information about Madurai fan fans who fervently celebrated 75th of "Vishwasam" -maduraill visvasam thiraipadathin

மதுரையில் உள்ள மதி திரையரங்கில் நேற்று “விஸ்வாசம் “திரைப்படத்தின் 75-வது நாள் மிக சிறப்பாக கொண்டப்பட்டது.

அந்த வீடியோவும் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான திரைப்படம் “விஸ்வாசம் “.இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.மேலும் இமான் இப்படத்திற்கு இசையமைத்தார் , சத்யா ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை  தயாரித்தது.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் விவேக் , யோகி பாபு , தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் , கோவை சாராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் “விஸ்வாசம் “படம் சமீபத்தில் 67 வது நாள் கொண்டாட்டம்  திருச்சியில் உள்ள அருணா திரையரங்கில் ரசிகர்கள்  மிக சிறப்பாக கொண்டாடினார்கள். இப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகியுள்ளது.

மதுரையில் உள்ள மதி திரையரங்கில் நேற்று “விஸ்வாசம் “திரைப்படத்தின் 75-வது நாள் மிக சிறப்பாக கொண்டப்பட்டது.அந்த வீடியோவும் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

https://media.dinasuvadu.com/uploads/2019/03/jCBICAvfsvJqtr-3.mp4