பார்த்திபனின் ஒத்த செருப்புக்கு கிடைத்த சர்வதேச விருது.
இந்தியளவில் பரிந்துரைக்கப்பட்டது விருதுக்கு பதில், இந்த விருது கிடைத்ததில் பெருமை
பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமாகிய இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய வெற்றி திரைப்படம் தான் ஒத்த செருப்பு சைஸ் 7. பார்த்திபன் தான் சோலோ நடிகராக நடித்திருந்தார்.
105 நிமிடங்கள் ஓடும் இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்று புகழப்பட்டது.
unknown node1 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உளவியல் சார்ந்த அதிரடி திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைக்கும் என பார்த்திபன் எதிர்பார்த்தது போல பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தியாவில் ஆஸ்கர் விருதுக்கு கூட இந்த படம் பரிந்துரைக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார்.
தற்பொழுது, இந்த படத்திற்கு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வைத்து விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இந்த படத்திற்கு நன் எடுத்த முயற்சிக்கும் தக்க சன்மானம் என கூறியுள்ளார்.