பிரபல நடிகர் கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கிடையில் கடைசியாக இவர் இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிப்பதாக உள்ளார்.
தற்போது கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார், அடுத்த மாதம் கூட திருச்சியில் பிரமாண்ட கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது, இந்தியாவில் ஒரு ஹாலிவுட் இயக்குனருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அதுகிரிஷ்டோபர் நோலனுக்குதான்.
இவர் விரைவில் இந்தியா வரவுள்ளார், அப்போது அவர் இயக்கியடன்கிர்க்திரைப்படம் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்யப்படவுள்ளது.
அது முடிந்த பிறகு நடிகர்கமல்ஹாசன், அமிதாப் பச்சனுடன்நோலன் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.