தனது 20வது படத்தில் மிஸ் இந்தியாவாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!

இந்த வருடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மகாநதி படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அறிவிக்கப்பட்டது.  இதனால், இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இந்த வருடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மகாநதி படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அறிவிக்கப்பட்டது.  இதனால், இந்தியா முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி தனது  இருபதாவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

unknown node

இந்த படத்தை நரேந்திரநாத் என்பவர் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்குமிஸ் இந்தியாஎன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் ஸ்டைலாகவும் கிளாஸாகவும் ரசிகர்களை கவரும்படி தோன்றுகிறார். இப்படத்தின் மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node