அடுத்த வெற்றிக்காக காதலர் தினத்தை குறிவைத்த கவின்!

kavin

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரிஸில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவின் பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ் 3’ மூலம் புகழ் பெற்றார்.

டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கிறார். கவின் நடிக்கும் தனது நான்காவது படமான ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படக்குழு 2024 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை வெளியிட திமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே, பியர் பிரேமா காதல் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கிய இளன் கண்டிப்பாக இந்த படத்தையும் இளைஞர்களை கவரும் வகையில் எடுத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ப்ரோமஷன் பணிகள் 2024ல் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்புக்கு ஆறுதல் சொன்ன கவின்-சினேகன்!

கவின் 5

இதற்கிடையில், அவரது ஐந்தாவது படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் மூலம்  நடன இயக்குனர் நடிகர் சதீஷ் கிருஷ்ணனின் இயக்குனராக அறிமுகமாகிறார்.

விடுதலைக்காக என்ட்ரி கொடுத்த அசுரன் சிதம்பரம்.! அப்போ விஜய் சேதுபதி மகன்?

கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிக்க மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் அனிருத் இசையமைப்பதுதான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்