இந்த விஷயத்திற்கு கரீனா கபூர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வாராம்

This news gives information about Kareena Kapoor is spending much money on this issue-entha cishyathirkku evlo vendumanalum

என்  மகனை பார்த்துக்கொள்ள நான் ஆயா வைத்து இருப்பதை விமர்ச்சனம் செய்கிறார்கள். என் மகன் பாதுகாப்பிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன். அதற்கு விலை மதிப்பே இல்லை.

ஹிந்தி சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர்.இவர் “ரேபியகீ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் ஹிந்தியில் பல நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார்.

கரீனா கபூர் 2012-ல் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கரீனா கபூருக்கு குழந்தை பிறந்த பின்பும் சினிமாவில்  நடித்து வருகிறார்.அதற்கு ஏற்ப இவரின் சம்பளமும் அதிகமாக உள்ளது. 2 வயது மகனை பிரிந்து சினிமாவில் நடித்து வருகிறார் என அவர் மீது விமர்சனங்கள் வருகின்றன.

மகனை பார்த்துக்கொள்ள ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் கொடுத்து ஆயாவை வைத்து உள்ளார். எனவும்  வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.இந்நிலையில்  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது  பற்றி கேள்வி கேட்ட போது கரீனா கபூர் அளித்த பதில்:

“என்  மகனை பார்த்துக்கொள்ள நான் ஆயா வைத்து இருப்பதை விமர்ச்சனம் செய்கிறார்கள். என் மகன் பாதுகாப்பிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன். அதற்கு விலை மதிப்பே இல்லை.மேலும் கர்வமாக நடந்து கொள்கிறார் என கூறுகிறார்கள்.

நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். அதனால் என்னை கர்வம் பிடித்தவள் என நினைக்கிறார்களோ என்று தெரியவில்லை. என்னை பற்றி தெரியாதவர்கள் பரப்பும் வதந்தி” என கரீனா கபூர் கூறினார்.