யுவனின் இசையில் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தின் இசை வெளியீட்டு தேதி!!!

Default Image

தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தான் படத்தின் கதாநாயகனாகவும் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற பாடல் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்திலிருந்து மொத்த பாடல்களும் ஜனவரி 24ஆம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்