நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் “காஞ்சனா3” வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பும்,பாராட்டுகளையும்,பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இதற்கு முன் நடித்த “காஞ்சனா”படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.இப்படத்தில் அக்ஷய் குமார், கைரா அத்வானி ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விவேகம், விஸ்வாசம் படங்களில் ஒளிப்பதிவு செய்த வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த செய்தியை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
With Blessings of Baba
Happy to be part of #Kanchana Hindi Remake #LaaxmiBomb Staring @akshaykumar Sir Directed by @offl_Lawrence Sir !!!! pic.twitter.com/iWcwtHQivA— Vetri Palanisamy (@vetrivisuals) April 28, 2019