சிம்புவின் மாநாடு படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மிக மிக அவசரம். இந்த படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
unknown nodeஇப்படம் பல தடைகளை தாண்டி நாளை வெளியாக உள்ளது. இப்படத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
unknown nodeமேலும், மிக மிக அவசரம் படத்தில் நடித்த ஸ்ரீபிரியங்கா தனது பெற்றோர்களுடன் அமைச்சர் வீட்டிற்கு சென்று பார்த்து பாராட்டுகளை பெற்றுள்ளார். ஒரு பெண் போலீசை கண்முன்னே நிறுத்தியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டியுள்ளார்.