தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது” அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. 10 ஆண்டில் தமிழ்நாட்டுக்காக பாஜக என்னென்ன செய்துள்ளது என பட்டியலிட அண்ணாமலை தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் பாஜக லட்சத்தீவை மீட்போம் என கூறினார்கள். ஆனால் தீர்வு காணவில்லை, காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய நீர்வள த்துறை மூலம் தீர்வு காண்போம் எனக் கூறினார்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. […]
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பதை காலம் முடிவு செய்யும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் […]
ஜெய் ஹிந்த் முழக்கம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்ரன் பேசியது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா முதல் அலை ஏற்பட்ட பொழுது அதிமுக அரசு அதை வெற்றிகரமாக சமாளித்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் எனவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி […]
கோவில்பட்டி தொகுதியில் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ , அமமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி ஆகியோர் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து கடம்பூர் […]
டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். எனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வேட்புமனுவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். எனவே […]
தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து கோவில்பட்டி தொகுதி நட்சத்திர தொகுதியாக உள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்கள் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமமுக சார்பில் டி.டி.வி தினகரனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன் போட்டியிடுகின்றனர். இதனால், தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு அமமுகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, […]
2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏ க்கள் கிடைத்த பின்னரே முதல்வர் ஆட்சி நிலையானதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் 2017-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், அந்த ஆட்சி நிலையான ஆட்சியாக மாறியது, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகுதான் எனவும் முதல்வர் தொடர்ந்து 2 […]
மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ரீல் தான் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 31 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்து அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி […]
சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என்று கூறிய நிலையில், இதற்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் […]
எஸ்.பி.பிக்கு பாரதராத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இவருக்கு சிலை அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என பலரும் முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதுபோல ஆந்திராவிலும் இவருக்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் […]
ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக மக்களை சந்திக்க தயாராக இல்லை. ஆன்லைன் அரசியலுக்கு வந்து விட்டனர். கொரோனா பரவலை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஆன்லைன் அரசியல் செய்து வருகின்றது. அரசியல், கட்சி பணிகளை ஆன்லைன் மூலம் செய்யும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைக்கு […]
முதல்வர், மற்றும் துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறதாகவும், யாராலும் எந்த சக்தியாலும் அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் இசைப்பள்ளி அமைக்கும் பணியின் தொடக்க விழா, நேற்று நடந்தது. அதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு இசை பள்ளி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், புதூர் ஊராட்சி நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் […]
திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது. கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக சுமார் 150 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சில படங்கள் OTT தளத்தில் வெளியிட்டு வருகின்றன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆலோசனையில் மத்திய […]
தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி.பி. துரைசாமி கூறியிருக்கலாம் என கூறிய அமைச்சர், 2011 -ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியானது போல தற்பொழுது பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை […]
எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இன்று விளாத்திகுளம் அருகே அமைச்சர் கடம்பூர் ராஜூசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது என கூறினார். இதையடுத்து, பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான், எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர் என தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் […]
சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் மரணம் அப் டெத் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே அது லாக் அப் டெத், தந்தை-மகன் இருவரையும் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட 2 நாள்களுக்கு பின்னரே தந்தை-மகன் உயிரிழந்துள்ளனர். மேலும், 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப் டெத் நடைபெற்றுள்ளது என கூறினார்.
ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவிவருவதால் அணைத்து பெரிய படைகளின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் சில திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகிவருகிறது . இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக இணைய தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது பரவாயில்லை ஆனால் இது தொடர்வது சரியானதல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு […]
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.அதிமுகவின் இந்த வெற்றியால் கட்சிகள் அனைத்தும் ஆடிப்போயுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.