ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகி டனியா மல்லெட் மரணம்

this news gives information about James Bond heroine Donna Mallette dies-James Bond kadhanayaki Donna Mallette maranam

தற்போது சிகிச்சை பலனின்றி டனியா மல்லெட்  இறந்து விட்டதாக ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. நடிகை  டனியா மல்லெட்  அவருக்கு தற்போது  வயது 77.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த  நடிகர் ,நடிகைகளை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெகுவாக கவர்ந்தது .

ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.  1964–ம் ஆண்டு ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வெளியான  திரைப்படம் கோல்ட் பிங்கர். இப்படத்தில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக  நடித்து இருந்தார்.

படத்தில் சீன் கானரி காதலியாக நடித்தவர் நடிகை  டனியா மல்லெட்.இப்படத்தை கய்ஹமில்டன் இயக்கினார்.இப்படத்திற்கு பிறகு டனியா மல்லெட் தயாரிப்பாளர் களுடன் ஒப்பந்தம் போட்டு அவர்களின்  கட்டுப்பாட்டில் இருப்பது பிடிக்காமல் சினிமாவை விட்டு விலகி விட்டதாக தகவல் வெளியானது.

பின்பு தொலைக்காட்சி  தொடர்களில் நடித்து வந்தார்.அதே நேரத்தில் மாடலிங்கிலும் ஈடுபட்டார்.இந்நிலையில்  வயது முதிர்வு காரணமாக உடல் நலம் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி டனியா மல்லெட்  இறந்து விட்டதாக ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. நடிகை  டனியா மல்லெட்  அவருக்கு தற்போது  வயது 77.