நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இப்படத்தில் சமந்தா நாயகியாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்திருப்பர். இப்படத்தை விஷாலே தனது சொந்த பட நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதயத்தில் நடக்கும் இணையத்தில் நடக்கும் கிரைம் பற்றி த்ரில்லாகவும், சுவாரசியமாகவும் படமாக்கப்பட்டிருந்தது.
unknown nodeதற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க விஷால் மும்முரமாக களமிறங்கியுள்ளார். ஆனால் இப்படத்தின் இயக்குனர் மித்ரன் இல்லை. அறிமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் தான் இப்படத்திற்கான வேலைகளை செய்து வருகிறார். இப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடிக்க உள்ளார். வில்லன் படத்திற்கு மீண்டும் அர்ஜுனை அணுகலாமா அல்லது வேறு பெரிய நடிகரை அணுகலாமா என படக்குழு யோசித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இரும்புத்திரை-2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.