பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது மூன்றாவது படத்திலேயே உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார். அந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸான சமயத்தில் மபெரும் வசூல் சாதனையை படைத்தது .
unknown nodeunknown nodeஇந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இந்த படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்க உள்ளார் . இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ழளார்.
இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு பணியை மேற்க்கொள்ள உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதனை படதயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டு கூறியுள்ளது .
DINASUVADU