வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு..! விஷால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ..!

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் வேலை  செய்பவர்களிடம் இருந்து பிடித்த டிடிஎஸ் தொகையை செலுத்தாததால்  விஷால் மீது வருமான

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் வேலை  செய்பவர்களிடம் இருந்து பிடித்த டிடிஎஸ் தொகையை செலுத்தாததால்  விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால் அப்போதும் விஷால் ஆஜராகவில்லை தொடர்ந்து மீண்டும் வழக்கு மீண்டும்  ஆகஸ்ட் 2-ம் தேதி ஒத்தி வைத்தார். ஆனால் அப்போதும் விஷால் ஆஜராகாததால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு விட்டது.

அடுத்த விசாரணைக்கு விஷால் தரப்பில் இருந்து பதில் அளிக்கவில்லை என்றால் காவல்துறை மூலம்  விஷால் நீதிமன்றம் அழைத்து வரப்படுவர் என நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் இன்று  சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் ஆஜரானார். தற்போது இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.