பாலு சீக்கிரம் வா.! எஸ்பிபிக்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு.!

பாடகர் எஸ்.பி.பி விரைவில் மீண்டு வர வேண்டும் என இளையராஜா ஒரு வீடியோ பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். 'பாலு நீ சீக்கிரம் வா' என அவர் பேசும் உருக்கமான

பாடகர் எஸ்.பி.பி விரைவில் மீண்டு வர வேண்டும் என இளையராஜா ஒரு வீடியோ பதிவில் உருக்கமாக பேசியுள்ளார்.‘பாலு நீ சீக்கிரம் வா’என அவர் பேசும் உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் மீண்டு வர உருக்கமாக பேசியுள்ளார்.‘பாலு நீ சீக்கிரம் வா’என அவர் பேசும் உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. ‘நம்முடன் சண்டை இருந்தாலும் சண்டை இல்லாவிட்டாலும் நமது நட்பு தொடரும்.’ என இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்

unknown node