தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன்.! கர்ணன் பட நடிகர் ஓபன் டாக்.!

Lal, who starred in Karnan, said that he was shocked to see Dhanush in Karnan.

கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டதாக கர்ணன் படத்தில் நடித்த லால் கூறியுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.பாடல்களை கண்ட ரசிகர்களைடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.எனவே படத்தினை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் . மேலும் கர்ணன் படத்தின் டீசர் ஞாயிறன்று வெளியாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது கர்ணன் படத்தில் நடித்த லால் தனுஷ் நடிப்பை குறித்து கூறியுள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்டரி கொடுத்துள்ள லால் கூறுகையில், கர்ணன் படத்தை முழுவதுமாக பார்த்து விட்டதாக கூறியதுடன் படத்தில் தனுஷ் வாழ்ந்துள்ளார் எனவும் , அவரின் நடிப்பை பார்த்து தான் மிரண்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.