7 வருடம் கழித்து வெளியாகும் முதல் DnA பாடல்.. தாய் கிழவி பாடல் வீடியோ இதோ...!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட்களை கொடுத்த காம்போ என்றால் நடிகர் தனுஷ் - அனிருத்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட்களை கொடுத்த காம்போ என்றால் நடிகர் தனுஷ் – அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான 3, வேலையில்லா பட்டதாரி, மாரி 1, தங்கமகன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

unknown node

இவர்கள் இருவரும் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு 5-வது முறையாக திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

unknown node

இந்த படத்தின் முதல் பாடலான “தாய்கிழவி” என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடலை தனுஷே எழுதி அவரே அனிருத் இசையில் பாடியுள்ளார். பாடல் மிகவும் அருமையாக இருப்பதால் ரசிகர்களை பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

unknown nodeunknown node

மேலும், திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.