மனதை கவரும் மெலோடி....வெளியானது 'வாத்தி' ஃபர்ஸ்ட் சிங்கிள்.!

நானே வருவேன் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. இந்த படத்தை திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி

நானே வருவேன் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது.

unknown node

Vaathi from December 2 [Image Source: Twitter ]

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வாவாத்தி பாடல் இன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது படத்திற்கான பாடல் வெளியாகியுள்ளது.

unknown node

Vaath First Single [Image Source: Google ]

இந்த பாடலை தனுஷ் எழுத, பாடகி ஸ்வேதா மோகன் அழகாக பாடியுள்ளார். பாடல் மிகவும் அருமையாக இருப்பதால் அருமை அழகு என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். கண்டிப்பாக இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என தெரிகிறது.

unknown node

இந்த பாடலை தொடர்ந்து அடுத்தாக படத்திற்கான டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாத்தி திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.