ஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல்.! பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.!

பிரண்ஷிப் படத்தின் சிம்பு அவர்களால் பாடப்பட்ட பர்ஸ்ட் சிங்கிள் நாளை ராகவா லாரன்ஸ் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரண்ஷிப் படத்தின் சிம்பு அவர்களால் பாடப்பட்ட பர்ஸ்ட் சிங்கிள் நாளை ராகவா லாரன்ஸ் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஹர்பஜன் சிங்கிற்கு பிறந்தநாள் பரிசாக பிரண்ஷிப் படக்குழுவினர் போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டதோடு சர்ப்ரைஸ் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ள அந்த போஸ்ட்ருடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பல பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிறந்தநாள் ஸ்பெஷலாக என்னவென்றால் பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை ராகவா லாரன்ஸ் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ‘சூப்பர் ஸ்டார் அந்தம் ‘என்ற அந்த பாடலை சிம்பு அவர்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

unknown node