தளபதி விஜயின் வெற்றிப்பயண சிறப்பு தொகுப்பு.! #HBDTHALAPATHYVijay

இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜயின் வெற்றி படங்களின் சிறப்பு தொகுப்பு.!

இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜயின் வெற்றி படங்களின் சிறப்பு தொகுப்பு.!

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்கிறார் தளபதி விஜய். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால், அவரது ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள்.

unknown node

தமிழ் சினிமாவில் 80’களில் முக்கிய இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக சினிமாவில் அறிமுகமானார் விஜய்.  விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு எனும் திரைப்படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் 1992-இல் அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்கள் தனது தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்தார். 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர் லவ் டுடே, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரத்தொடங்கினார்.

unknown node

இடையிடையே சில சறுக்கல்களை சந்தித்தாலும் துள்ளாத மனமும் துள்ளும், மின்சாரக்கண்ணா, குஷி, பத்ரி என இடையிடையே பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக உயர்ந்துவிட்டார். இவரது நடிப்பில் கில்லி திரைப்படம் தமிழ் சினிமா வசூல் சாதனைக்கு மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் திருப்பாச்சி, சிவகாசி, என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து போக்கிரி படம் மூலம் மீண்டும் பிளாக்பஸ்டர் நாயகனாக வலம் வர தொடங்கினார்.

unknown node

தற்போது ரஜினிக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் கடைசியாக வெளியான பிகில் திரைப்பட வசூல் மூலம் ரஜினியை மிஞ்சிய நாயகனாக விஜய் வளர்ந்து விட்டார் என்றே கோலிவுட் வட்டாரங்கள்கூறுகின்றன. அதற்கு சாட்சிதான் தற்போது அவர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் மீதான ஏகபோக வரவேற்பு.

unknown node

அந்த அளவுக்கு அவரின் பட வசூல் சாதனை படைத்து வருகின்றன. துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக கொடுத்து, தனது படங்களின் வசூல் சாதனையை தானே முறியடித்து வருகிறார் விஜய் என்றால் அது சாதாரண விஷயமல்ல.

unknown node

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி கதைகளை தேர்வு செய்து அதில் பெரும்பாலும், குறை வைக்காமல் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது விஜயின் ஒவ்வொரு படமும்.! இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இந்த அழகிய தமிழ் மகன் தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.