பிரமாண்ட இயக்குனர்என இவரை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும். அந்த பிரமாண்டத்தை பற்றி அவர் கூறுகையில் அந்த கதை களமும் காட்சியமைப்பும் அதற்கான தேவைகளை எடுத்து கொள்கிறது. என கூறி விடுவார். ஆம். அது உண்மையே அவருடைய படங்களை பார்க்கையில், அதில் ஒவ்வொரு பிரமாண்ட காட்சியும் கதைக்கு தேவை என்பதும் தேவையில்லாமல் எந்த காட்சியும் வரவில்லை எனவும் நமக்கு புலப்படும்.
unknown nodeஅவர் யோசிக்கும்காட்சிகளும், பாத்திர படைப்புகளும்அதற்க்கானதேவைகளை எடுத்து கொள்கிறது என்பதே நிதர்சனம். படம் தமிழ் படங்களை இந்திய சினிமாவரை உயர்த்தியது. இந்திய சினிமா எடுக்கையில் அதனைஉலக அரங்கில்கொண்டு செல்வது. என இவர் எட்டிப்பிடித்த தூரம் இவரது சிந்தனைக்கு நிகரானவையே என்பது உண்மை. இன்னும் அவர் எந்த உயரத்தை தனது இலக்காக வைக்க போகிறார்? அவர் தொடாத உயரம் என்ன என நாம் நினைக்கையில் அதனை தாண்டிதான் அவரது இலக்கு நிச்சயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
unknown nodeஅவரது முதல் படமானஜென்டில்மேன்படத்தில் ஏழை மாணவர்களின்கல்வி கனவுகளில் பணமும் அரசியலும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது முதல், கடைசியாக வெளியான2.Oவில்,அதீத வளர்ச்சி பெற்ற டெக்னாலஜிநம்மையும் நம்மை சுற்றியுள்ள உயிரினனங்களையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது வரை தனது ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை ஆழமாக பதிய வைத்து வந்துள்ளார். இந்தபிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.
unknown nodeகல்வி (ஜென்டில் மேன்), லஞ்சம் ஊழல் (இந்தியன்), ஒரு நாள் முதல்வர்(முதல்வன்), தனி நபர் அலட்சியம் (அந்நியன்), தற்கால மாணவர்கள் (பாய்ஸ்),கருப்பு பணம் (சிவாஜி), எந்திரமயம்( எந்திரன்), டெக்னலாஜியினால் ஏற்பட்ட பாதிப்புகள் (2.O) என ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ஒரு சமூக கருத்தை தனது ஸ்டைலில் நம் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறார் இயக்குனர் ஷங்கர்.
unknown nodeஇந்திய சினிமாவின் பிரமாண்ட சொத்து தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசிக்க படும் இயக்குனர்ஷங்கர்அவர்களுக்கு தினச்சுவடு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!