மாஸான பீஸ்ட் அப்டேட்.! மோசமான அரசியல்வாதியாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

unknown node

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைத்து பட ஷூட்டிங் நடைபெற்றது.

தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் மோசமான அரசியல்வாதியாக நடிக்கிறாராம். விஜய் ரகசிய ராணுவ வீரராக நடிக்கிறாராம்.