நடிகர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ள திரைப்படம் “வாடிவாசல்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனென்றால், வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
unknown nodeசூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகே வாடிவாசல் படம் தொடங்கும் என தெரிகிறது.
unknown nodeகடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு சில நாட்கள் நடைபெற்றது. ஈ.சி.ஆர் ரோட்டில் எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் சிறப்பாக வந்திருப்பதால் அதனை வீடியோவாக சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeவரும் ஜூன் 23-ஆம் தேதி தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பரிசளிக்கும் வகையில் , வாடிவாசல் படத்தின் (glimpse) வீடியோவை வெளியிட உள்ளார்களாம்.