நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeThalapathy 67 [Image Source: Twitter ]
அடுத்த மாதம் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படியுங்களேன்-பார்ட்டியில் எனக்கு கிடைத்த முத்தம்.. அதை மறக்க முடியாது.! ரகசியத்தை உளறிக்கொட்டிய ஆண்ட்ரியா.!
unknown nodeThalapathy 67 mysskin [Image Source: Twitter ]
அந்த வகையில், கடந்த மாதம் ஒரு தகவல் பரவியது அது என்னவென்றால், தளபதி 67 படத்தில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். இந்த செய்தியை பார்த்த பல விஜய் ரசிகர்களுக்கு படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பும் இன்னும் அதிகமானது.
unknown nodeThalapathy 67 mysskin [Image Source: Twitter ]
ஆனால், தற்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மிஷ்கின் தனிப்பட்ட சில காரணங்களால் தளபதி 67 படத்திலிருந்து விலகிவிட்டாராம். தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மாவீரன் படத்தில் மட்டுமே நடித்துவருகிறாரம்.