சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் இயக்க இருந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த படம் சில காரணங்களால் லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கும் புதிய படம் தயராகி வருகிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
unknown nodeஆனால் சில காரணங்களால் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் இணையும் படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.