மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி.?!

தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி இயங்குவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து அவ்வப்போது சமூக வலைதளத்தில் தளபதி 67 குறித்த தகவல் பரவி வருவது வழக்கம் அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

unknown node

இதற்கு முன்பு விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. மீண்டும் இந்த கூட்டணி இணைந்தால் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.