தேவர் மகன் படத்தில் ரேவதி கேரக்டரில் முதலில் நடித்த முன்னணி நடிகை.!

It has been reported that Meena was the first to play the role of Revathi in Thevar Magan.

தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மீனா தான் நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1992-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தேவர் மகன்.இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, சங்கிலி முருகன் உட்பட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றனர்.

இந்த நிலையில் தற்போது தேவர் மகன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது மீனா தானாம்.அதற்காக முதல் முன்று நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் அவர் செட்டாகாத காரணத்தால் தேவர் மகன் படத்திலிருந்து விலக ரேவதி அதில் ஒப்பந்தமாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.