சங்கத்தில் புகார் அளித்த இளையராஜா.! விஜய் சேதுபதி படத்திற்கு பெரும் சிக்கல்.!

கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாரயணன் நியமித்தது குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளதாம்.

கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாரயணன் நியமித்தது குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளதாம்.

விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட விழாக்களுக்கு படம் அனுப்பப்பட்டு பாராட்டும் பெற்றது.

unknown node

அதன் பிறகு, படக்குழுவினருக்கும், இளையராஜா தரப்புக்கும் நெருடல் உருவானதால், படத்தில் இருந்து இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணன் இசையை கோர்த்து படத்தை தயார் செய்து விட்டனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இளையராஜா, தன்னுடைய எந்த படத்திற்கும் இந்த மாதிரி ஆனதில்லை எனவும், தன்னுடைய அனுமதி இன்றி இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது எனவும் இசையமைப்பாளர் சங்கத்தில் படக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளாராம். சங்கத்தின் மூலம் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.