நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeAjith And Vignesh Shivan [Image Source: Twitter ]
இந்த திரைப்படத்தில் நடித்துமுடித்த பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeAK62 Movie [Image Source: Twitter ]
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு துணிவு திரைப்படம் வெளியான பிறகு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், “AK62” படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் இணையத்தில் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்களேன்-பிக் பாஸ்-க்கு நன்றி.. வச்சி செஞ்சிட்டாங்க… பிரயோஜனமே இல்ல.! வேதனைப்பட்ட சித்தப்பு.!
unknown nodeAjith And Trisha In AK62 Movie [Image Source: Google ]
அது என்னவென்றால், “AK62” திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளாராம். இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியவிட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்த தகவல் உண்மை என்றால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
unknown nodeAjith And Trisha In AK62 Movie [Image Source: Google ]
மேலும், இதற்கு முன்பு அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்த கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய 3 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அது மட்டுமின்றி இவர்களது ஜோடியும் பலருக்கு பிடிக்கும். எனவே இவர் “AK 62 ” படத்தில் நடித்தால் நன்றாக தான் இருக்கும் என அஜித் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துள்ளனர்.