ஒரு பக்கம் கேங்ஸ்டர்.. மறுபக்கம் மனைவியுடன் ஜில்.! வைரலாகும் அஜித்தின் போட்டோஸ் – வீடியோ.!

நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஜோடியின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar - Shalini Ajith

சென்னை :தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இப்பொழுது, இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அஜித் குமார், வெள்ளை நிற பிளேஸர் மற்றும் உள்ளே ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருக்கிறார்.

unknown node

மற்றொரு புகைப்படத்தில் அஜித், படப்பிடிப்பு தளத்தில் படக்குழு உறுப்பினர்களுடன் உரையாடுவதைக் காணலாம். அதுமட்டுமின்றி காரில் இருந்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

unknown node

இதனிடையே, பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அவர் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வார். அந்த புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். தற்பொழுது நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஜோடியின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

அந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. அநேகமாக, இது அவரது விடுமுறை நாட்களில் எடுத்ததாக கூறப்படுகிறது. இப்படி, ஒரு பக்கம் கேங்ஸ்டராக ஷூட்டிங் ஸ்பாட்டிலும், மற்றொரு பக்கம் மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசிய நடிகர் அஜித், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது குறித்து ஊக்கமாக பேசியிருந்தார்.