இயக்குநர் கெளதமன் படத்திற்கு 10 நிமிடத்தில் மெட்டு போட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கெளதமன் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், படத்திற்கான பாடல்கள் இசையமைக்கும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இயக்குனர் கௌதமன், ஜிவி பிரகாஷ், வைரமுத்து ஆகிய மூன்று பெரும் ஒரு இடத்தில அமர்ந்துகொண்டு வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை விவாதித்து உற்சாகமாக பாட்டு கட்டி வருகின்றனர். அப்போது அந்த பாடலுக்கான மேட்டுவை ஜிவி 10 நிமிடத்தில் செய்து அசத்தியுள்ளார்.
அதற்கான வீடியோவை வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு ஜிவி பிரகாஷை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது ” ஜி.வி.பிரகாஷ் வீடு கெளதமன் படத்துக்குப் பாட்டுக் கட்டுகிறோம் மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படுகிறது பாட்டு “வஞ்சிக்கொடியே வாடி – நீ வளத்த பொருளத் தாடி பாசத்த உள்ளவச்சுப் பாசாங்க வெளியவச்சு வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே” பத்தே நிமிடத்தில்பாட்டு பிரமாதம் பிரகாஷ்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
unknown node