ஹீரோ ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. அதனை எல்லாம் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்தாலே இந்த வருட டாப் ஹீரோ இவர்தான்.
unknown nodeஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் 100 % காதல்.இத்திரைப்படம் தெலுங்கில் நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் ஹிட்டான 100 % லவ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் பாடல்கள் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஅதே போல ஈட்டி பட இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் திரைப்படம் ஐயங்காரன். மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.