கோபத்தில் கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்! காட்டமான கருத்தினை பதிவிட்ட பிரபல நடிகர்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல வெற்றி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், ாலும் கட்சியை மறைமுகமாகவும், ஒரு சில இடங்களில் நேரடியாகவும் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் தளபதி விஜயின் பேச்சு சமூக ஊடங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்வுக்கு வந்த விஜய் ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர். இதனை மற்ற நடிகர்கள் விமர்சித்து வருகிற நிலையில், விஜயின் தீவிர ரசிகரான, நடிகர் சந்தனு தனது ட்வீட்டர் பக்கத்தில் காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், “எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் வந்தது என்றால், எந்த பெரிய மனிதர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. மேலும், அடிமட்டத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் தவறுக்கு மேல் இடத்தில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
And by lower level I dint mean lower level in life ! Pls don’t misinterpret EVERYTHING ! Lower level means ppl working as ground staff and security ! NOT THE PUBLIC ! Edha sonnalum cleara sollavendi iruku ????????
SOMEONE makes a mistake, SOMEONE GETS BLAMED & PUBLIC gets affected https://t.co/I5nbgaYpXf— Shanthnu Buddy (@imKBRshanthnu) September 20, 2019