தமிழ் சினிமாவில், தனுஷ் -செல்வராகவன் கூட்டணிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர்களது கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
unknown nodeதற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தயாரிக்கிறார்.
unknown nodeஇந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.இதற்கிடையில் தனுஷ் குறித்து செல்வராகவன் நெகிழ்ச்சியாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
unknown nodeஅதில் “நாங்கள் இருவரும் நீண்ட காலமாக எங்களுடைய சொந்தப் படங்களில் பிஸியாக இருந்ததால், ஒருவரோடொருவர் அதிகமாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நானே வருவேன் படத்தின் மூலமாக இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தனுஷ் என்ற இந்த மனிதர் தங்கமான மனம் கொண்ட சிங்கம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
For a long time we never got a chance to spend qualtity time with each other as we were both busy with our own independent projects. Glad we got this precious opportunity in #NaaneVaruven . This man @dhanushkraja is a lion with a golden heart ???? ❤️ pic.twitter.com/moQNfIy4W2
— selvaraghavan (@selvaraghavan) April 8, 2022