பர்ஸ்ட் டேய் பர்ஸ்ட் ஷோவே சவுண்ட் கிழியும்.! மாஸ்டர் குறித்து பிரபல நடிகர்.!

மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கே தியேட்டரில் சவுண்ட் கிழியும் என்று நடிகர் தீனா பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கே தியேட்டரில் சவுண்ட் கிழியும் என்று நடிகர் தீனா பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது தளபதியின் படம் எப்போது ரிலீஸ் செய்யப்பட்டாலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் சூர்யாவின் சூரரை போற்று ஓடிடியில் ரிலீஸ் செய்வதை அடுத்து மாஸ்டரும் ஓடிடியில் ரிலீஸ் செயெயப்படுமா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் அதற்கு மாஸ்டர் படத்தில் நடித்துள்ள தீனா பதிலளித்துள்ளார். அதில் மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என்றும், முதல் நாள் முதல் காட்சி தியேட்டரில் சவுண்ட் கிழியும் என்றும் கூறியுள்ளார்.

unknown node
பர்ஸ்ட் டேய் பர்ஸ்ட் ஷோவே சவுண்ட் கிழியும்.! மாஸ்டர் குறித்து பிரபல நடிகர்.!