கீர்த்தி சுரேஷ்-செல்வராகவனின் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!

Filming of Saanikaayidham, co-starring Keerthi Suresh and Selvaraghavan, has started with Pooja.

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிக்கவுள்ள சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.தமிழில் அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார்.இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இன்று முதல் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு ஜோடியாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளார்.இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.சமீபத்தில் இந்த பர்ஸ்ட் மற்றும் செக்கன்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

unknown node