தளபதி 65 படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்..??

thalapathy 65 is said to have co-starred in the film with popular choreographer Johnny Master

தளபதி 65 படத்தில் பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற மே 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஒரு அட்டகாசமான பாடலை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

unknown node