பிரபாஸின் "ராதே ஷியாம்" படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!

Radhe Shyam, starring Prabhas and Pooja Hegde, has announced that actor Jayaram will be teaming up for the film.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷியாம் படத்தில் நடிகர் ஜெயராம் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார் .இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அதே போன்று பூஜா ஹெக்டே பிரேர்னா என்ற கேரக்டரிலும் நடிக்கிறார் .

ராதே ஷியாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது இத்தாலியில் முடித்து விட்டு படக்குழுவினர் ஐரோப்பாவில் திரும்பியுள்ளனர்.மேலும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகரான ஜெயராம் இணைந்துள்ளார் . மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் இவர் தெலுங்கில் அல்வைகுந்தபுரமுலோ ,பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

தற்போது பிரபாஸ் நடிக்கவிருக்கும் ராதே ஷியாம் படத்தில் இணைந்துள்ளதாக ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.பிரபாஸூடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த ஜெயராம்,தனது அடுத்த தெலுங்கு திரைப்படம் ராதே ஷியாம் என்றும் ,அதற்காக பிரபாஸூடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் , படத்தின் கதை இதயத்தை தூண்டியதாகவும்,அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை உள்ளிட்டவற்றை காண ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.படத்தினை அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

unknown node