ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்....!

Popular Tamil actor Arvind Trivedi, who played Ravana in the Ramayana series, has passed away due to organ failure.

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் திரிவேதி உடல் உறுப்புகள் செயலிழப்பால் காலமாகியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் எனும் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் அரவிந்த் திரிவேதி. இதனையடுத்து அவர் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்பொழுதும் மும்பை காந்திவிலி எனும் பகுதியில் வசித்து வந்த இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், அரவிந்தர் திரிவேதிக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவு இருந்தது.

மேலும் அவருக்கு உடல் உறுப்பு செயலிழப்பு இருந்ததாகவும், இதன் காரணமாக நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது எனவும் கூறியுள்ளார். இவரது மரணம் திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.