அண்ணாமலை எடுத்த அதிரடியான முடிவு..அதிரிச்சியில் சிறகடிக்க ஆசை குடும்பம் ..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 28]எபிசோடில் முத்து மீனாவை  விசாரிக்கும் வித்யா.. கடுப்பாகும் ரோகினி..

Annamalai,manoj (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 28]எபிசோடில் முத்து மீனாவை  விசாரிக்கும் வித்யா.. கடுப்பாகும் ரோகினி..

அண்ணாமலையிடம் கெஞ்சும் குடும்பம் ;

முத்து ,மனோஜ், ரவி மூணு பேருமே குடிச்சிட்டு வந்திருக்காங்க.. அதனால அண்ணாமலை கோபப்படுறாரு இன்னைக்கு நைட்டு நீங்க வெளியவே படுத்துக்கோங்க வீட்டுக்குள்ள யாரும் வரக்கூடாது அப்படின்னு சொல்றாரு.. இதைக் கேட்ட ரோகிணியும் மீனாவும்  வெளில மழை வர மாதிரி இருக்கு மாமா இன்னைக்கு ஒரு நாள் மன்னிச்சுக்கோங்க அப்படின்னு சொல்றாங்க.. விஜயாசொல்லுறாங்க  மனோஜ மட்டும் உள்ள விடுங்க அப்படின்னு  அதுக்கு அண்ணாமலை  இதுல கூட நீ பாரபட்சம் பார்பியா .. மூணு பேருமே வெளியவே இருக்கட்டும் அப்படின்னு சொல்லி கதவை அடைச்சிடுறாரு.. மீனா தூக்கம் வராம உட்கார்ந்து இருக்காங்க . ரோகிணியும் மனோஜ் கிட்ட இருந்து செல்ல எப்படி எடுக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருக்காங்க.

இந்த பக்கம் வெளியில மூணு பேருமே போதையில உளறிட்டு தூங்குறாங்க.. முத்து மட்டும் தண்ணி குடிக்கிறதுக்காக வர்றாரு அந்த டைம்ல மீனாவும் கதவை திறக்குறாங்க.. என்னங்க கூப்பிட்டீங்களா அப்படின்னு கேட்க அதுக்கு முத்து  சொல்றாரு கூப்பிடலாம்னு நெனச்சேன்.. தண்ணி வேணும் மீனா.. மீனாவும் தண்ணி கொண்டு வந்து குடுக்குறாங்க என் கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிகிட்டு இரு மீனான்னு  உட்கார வைச்சு  பேச ஆரம்பிக்கிறாரு ..இரண்டு பேருமே ரொம்ப ரொமான்டிக்கா பேசிட்டு இருக்காங்க.. இப்போ ரோகினி செல்ல எடுக்க  ரூமை திறக்கறாங்க இங்க பார்த்தா ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் வந்து பார்க்கிறாங்க அப்பவும் பேசிட்டு இருக்காங்க.. கடுப்பாகி  ரூமுக்குள்ள  போய்  உட்கார்ந்து இருக்கிறாங்க..

Annamalai ,muthu (1)

இப்ப வித்யா கால் பண்றாங்க என்னடி ..செல்ல எடுத்துட்டியான்னு கேட்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க மூணு பேரையும்  மாமா பனிஷ்மென்ட் கொடுத்து வெளியவே படுக்க சொல்லிட்டாரு .. வெளியில தான் படுத்து இருக்கிறாங்க.. சரி வெளியேத்தானே படுத்திருக்காங்க போய் எடுத்துட்டு வர வேண்டியதுதானே அப்டின்னு வித்யா  சொல்ல.. இல்லடி அந்த முத்து மீனா உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க.. இவ்வளவு குடிச்சா இன்னும் அவர் தூங்கலையா  ரெண்டு பேரும் என்னடி  பேசுறாங்க  அப்படின்னு ஆவலோடு கேட்க.. இத  கேட்டதும் ரோகிணிக்கு   கடுப்பாகுது அதோட இன்னைக்கு  எபிசோட முடுச்சுருக்காங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்