தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டே இந்த மாத இறுதியில் இணைந்து கொள்கிறார்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் வி.டி.வி கணேஷ், யோகி பாபு, அபர்ணா தாஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம்.
இந்த நிலையில் ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டே எப்போது நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், பூஜா ஹெக்டே இந்த மாத இறுதியில் இணைந்து கொள்கிறார். ஏனெனில் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.