விடுமுறையில் செம கலெக்ஷன்! ஸ்டார் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

STAR

STAR Box Office : ஸ்டார் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

கவின் நடிப்பில் மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 2.8 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

முதல் நாளில் படத்திற்கு நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் அடுத்தடுத்த நாட்களில் ஸ்டார் படத்திற்கான டிக்கெட் புக்கிங் அமோகமாக அதிகமானது என்றே சொல்லலாம். எனவே, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை தினங்களில் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

அதன்படி, சனிக்கிழமை மட்டும் படம் 4 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமையும் 4 கோடி வசூல் செய்ததாகவும் மொத்தமாக வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 10.8 கோடி வசூல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த ஸ்டார் படம் வெளியான 4 நாட்களிலே உலகம் முழுவதும் 10.8 கோடி வசூல் செய்துவிட்டது. எனவே, விரைவில் பட்ஜெட்டை தாண்டி படம் பெரிய அளவில் வசூலை குவித்துவிடும் என கூறப்படுகிறது. இந்த ஸ்டார் படத்தை இயக்குனர் இளன் இயக்கியுள்ளார். படத்தில் கவினுடன் அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்