ICC-யை ஏமாற்ற நினைத்த வீரர்... இறுதியில் கிடைத்த அதிர்ச்சி தண்டனை!

அபுதாபி T10 தொடரில் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக நிரூபிக்கப்பட்ட அமெரிக்க வீரர் போடுகும் அகிலேஷ் ரெட்டிக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது ஐசிசி.

Hero Image

துபாய் : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், அமெரிக்க அணியின் கிரிக்கெட் வீரரான போடுகும் அகிலேஷ் ரெட்டி (Bodugum Akhilesh Reddy) மீது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐசிசி (ICC) கடுமையான தடையை விதித்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்ற 'அபுதாபி டி10' (Abu Dhabi T10 2025) கிரிக்கெட் தொடரின் போது ஊழல் தடுப்புச் சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளும் ஐசிசி தீர்ப்பும் என்ன?

ஐசிசி ஊழல் தடுப்புத் தீர்ப்பாயம் (ICC Anti-Corruption Tribunal) நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், அகிலேஷ் ரெட்டி ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Anti-Corruption Code) கீழ் மூன்று முக்கியமான பிரிவுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்

போட்டி மற்றும் முடிவுகளைத் திசைதிருப்ப முயன்றது (Article 2.1.1): அபுதாபி டி10 2025 தொடரில் நடைபெற்ற போட்டிகளின் முடிவு, முன்னேற்றம், மற்றும் பிற அம்சங்களை முறைகேடாக மாற்ற முயன்றது அல்லது அதற்கு உடந்தையாக இருந்தது.

மற்றவர்களைத் தூண்டுதல் (Article 2.1.4): மற்ற போட்டியாளர்களையும் இதேபோன்று ஊழல் தடுப்பு விதிகளை மீறும்படி தூண்டியது, வற்புறுத்தியது அல்லது அதற்கு உதவி செய்தது.

விசாரணைக்குத் தடை ஏற்படுத்தியது (Article 2.4.7): ஐசிசியின் நியமிக்கப்பட்ட ஊழல் தடுப்பு அதிகாரியின் (DACO) விசாரணைக்குத் தடையாக இருக்கும் வகையில், தனது மொபைல் போனில் இருந்த முக்கியத் தரவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை (Data and messages) அழித்தது.

இந்தச் சட்ட விதிகளை மீறியது உறுதியானதை அடுத்து, அகிலேஷ் ரெட்டியை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 8 ஆண்டுகளுக்கு தடை செய்து ஐசிசி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2025 நவம்பர் 21-ஆம் தேதி முதல் அவர் தற்காலிகமாகச்suspended (Provisional suspension) செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த 8 ஆண்டுத் தடையானது அன்றைய தேதியிலிருந்தே கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்ப்பின் சில விவரங்கள் மறைக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் உலகில் ஊழல் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது ஐசிசி எந்தவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.

ICC-யை ஏமாற்ற நினைத்த வீரர்... இறுதியில் கிடைத்த அதிர்ச்சி தண்டனை!