செக்க சிவந்த வானம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்என படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் அதிகமானோர் நடித்துள்ளனர்.
unknown nodeஇந்த படம் வெளிவந்து நான்கு நாட்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது என்று பாக்ஸ் ஆபிசில் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தமிழகத்தில் மட்டும் 27 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது சென்னை அபிராமபுரத்தில் உள்ள செக்க சிவந்த வானம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.