'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன்.! டைட்டில் என்ன தெரியுமா.?

Leo Sivakumar, son of Dindigul Leoni, will star in the next film of master filmmaker Xavier Brito.

மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் அடுத்த படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகனான லியோ சிவகுமார் நடிக்கவுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது.இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அழகிய கண்ணே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஹீரோவாக லியோ சிவக்குமார் நடிக்கவுள்ளார்.இவர் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க விஜயகுமார் என்பவர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜையானது நேற்று நடைபெற்றது.இதில் லியோனி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.