இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம்மயக்க என்ன.இப்படம் விமர்சகர்கள் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், பெரிய வெற்றியை பெறத் தவறியது. தற்போது, மீண்டும்செல்வராகவன் – தனுஷ்கூட்டணி ஐந்து வருடத்துக்கு பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்தைகலைப்புலி எஸ் தாணுதயாரிக்கிறார்.
கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே தனுஷை வைத்து மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்திருந்தார். அதில் ஒரு படம்வெற்றிமாறன்இயக்கத்தில் வெளியாக உள்ளஅசுரன்இன்னொரு திரைப்படம்பரியேறும் பெருமாள்இயக்குனர்மாரி செல்வராஜ்இயக்கத்தில் வெளியாக உள்ள தனுஷ் படம். அடுத்ததாக. செல்வராகவன் திரைப்படம் என மூன்று படங்கள் வெளியாக உள்ளது.
தனுஷ் – செல்வராகவன்திரைப்படத்தில்யுவன் ஷங்கர் ராஜாஇசையமைக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.தனுஷ் செல்வராகவன் – யுவன்கூட்டணியில் கடைசியாகபுதுப்பேட்டைபடம் வெளியானது. அதற்கடுத்ததாக12 வருடத்திற்குபிறகு இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை அசரடித்துள்ளது.