தென் இந்திய சூப்பர்ஸ்டாரை இயக்கத் தயாராகும் நடிகர் தனுஷ் !

மேலும், தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி2’ திரைபடம் உருவாகி வருகிறது, பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி பல விமர்சனங்களையும் தோல்விகளையும் தாண்டி தற்பொது பாலிவுட் ஹாலிவுட் வரை கலக்கி வருபவர்.ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன் தரத்தை உயர்த்திக்கொண்டே செல்லும் நடிகர் தனுஷ், ராஜ்கிரனை வைத்து பவர்பாண்டி எனும் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் தனுஷ்.

unknown node

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ், ஆகஸ்ட் மாதம் அதன் படப்பிடிப்பை துவங்கவுள்ளார். மேலும் இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

unknown node

முதலில் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தேதி பிரச்சனை காரணமாக நாகார்ஜுனா இந்தப்படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்தியுடன் ‘தோழா’ படத்தில் நடித்து நாகார்ஜுனா மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி2’ திரைபடம் உருவாகி வருகிறது, பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.