மீண்டும் சீரியலில் களமிறங்கிய தேவயானி..!

Actress Devaiyani will be seen in the serial 'Pudu Pudu Arthangal' which will be aired on G Tamil TV.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிகை தேவையானி நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தேவயானி நடிப்பில் கோலங்கள் என்ற சீரியல் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மறக்க முடியாத ஒரு செயலாக இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் இறுதியாக 2009 வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்ததற்கு பிறகு நடிகை தேவயானி சீரியல்களில் நடிக்கவில்லை. இதனால் இவர் எப்போது சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கல் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அப்டேட் கிடைத்துள்ளது.

மராத்தியில் உருவான (அகபாய் சசுபாய் ) Aggabai Sasubai என்ற சீரியலின் தமிழ் ரீமேக்கில் நடிகை தேவயானி நடிக்கவுள்ளார். இந்த சீரியல் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலிற்கு புது புது அர்த்தங்கள் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

unknown node